53 வயதில் விவாகரத்து பெற்றதை விருந்து வைத்து கொண்டாடிய தைவான் நடிகை!

0
220

விவாகரத்து பெறுவது சிலருக்கு மனக்கசப்பான அனுபவமாக இருக்கலாம். ஆனால் அது கொண்டாட்டத்திற்கான நிகழ்வு என்கிறார் தைவானிய நடிகை He Ruyun.

53 வயதான நடிகை ஹி ருயூன் (He Ruyun) தமது கணவரிடமிருந்து விவாகரத்து பெற்றுள்ளார்.

53 வயதில் விவாகரத்து பெற்றதை விருந்துவைத்து கொண்டாடிய நடிகை!(Photos) | Actress Celebrated Divorce Party

அவர் Parkview ஹோட்டல் ஹுவாலியனின் தலைமை நிர்வாக அதிகாரியான சாங் மின்சியை 2003ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். எனினும் மின்சி அவரைப் பலமுறை ஏமாற்றியதாகக் கூறப்படுகிறது.

ருயூன் (He Ruyun) விவாகரத்துக்கு விண்ணப்பித்து சுமார் 3 ஆண்டுகளுக்குப் பின்னர் இம்மாதம் அது அதிகாரபூர்வமானது.

இதனையடுத்து தமது திருமணத்தின் முடிவைக் கொண்டாட அவர் சென்ற வாரம் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

அந்த விருந்தில் அவர் எடுத்த படங்களைத் தமது முகநூலில் பதிவிட்ட நிலையில் இணையவாசிகள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்களாம்.