அமெரிக்கருக்கு குடியுரிமை வழங்கிய ஜனாதிபதி புடின்!

0
408

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் முன்னாள் ஒப்பந்ததாரரான எட்வர்ட் ஸ்னோடனுக்கு (Edward Snowden) ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) ரஷ்ய குடியுரிமை வழங்கியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி நேற்று கையெழுத்திட்ட ஆணையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கருக்கு குடியுரிமை வழங்கிய ஜனாதிபதி புடின்! | President Putin Granted American Citizenship

ரஷ்ய குடியுரிமை வழங்குவதற்கான ஆணையில் பட்டியலிடப்பட்ட 75 வெளிநாட்டவர்களில் ஸ்னோடனும் (Edward Snowden) ஒருவராவார். இதற்கான உத்தரவு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினரான எட்வர்ட் ஸ்னோடன் (Edward Snowden) அமெரிக்க அரசாங்க கண்காணிப்பு திட்டங்களை விவரிக்கும் இரகசிய ஆவணங்களை கசியவிட்டதை அடுத்து அமெரிக்காவில் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக அங்கிருந்து தப்பிச்சென்று 2013 முதல் ரஷ்யாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.