பூமியை தாக்க வந்த சிறுகோள்; வீழ்த்திய நாசா

0
404

பூமியை தாக்க வாப்புள்ள சிறுகோள் மீது விண்கலத்தை வெற்றிகரமாக மோதச்செய்து நாசா சாதனை படைத்துள்ளது.

சூரிய மண்டலத்தில் உள்ள கோள் பூமி. பூமியை சுற்றி லட்சக்கணக்கான வால்மீன்கள், சிறுகோள்கள், விண்கற்கள் சுற்றி வருகின்றன.

இதனிடையே, இந்த சிறுகோள்கள் அல்லது பிற விண்வெளி கற்கள் போன்றவை பூமியை தாக்க வாய்ப்பு இருக்கிறதா? என விஞ்ஞானிகள் கண்காணித்து வருகின்றனர்

அந்த வகையில், அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா, கிரக பாதுகாப்புக்கான அதன் தற்போதைய பணியை நிர்வகிக்க ‘கிரக பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அலுவலகம்(பிடிசிஓ)’ ஒன்றை நிறுவி உள்ளது.

இந்த அமைப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் விண்கலம் ஒன்றை விண்வெளிக்கு அனுப்பியது. அந்த விண்கலம் பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என கணிக்கப்பட்ட டிடிமோஸ் பைனரி என்ற சிறுகோளை கண்டுபிடித்தது.

இந்த டிடிமோஸ் பைனரி சிறுகோளை பூமி மீது மோதுவதை தடுத்து அதை திசைதிருப்ப நாசா சோதனை அடிப்படையில் முயற்சிகளை மேற்கொண்டது. அந்த வகையில் நாசாவால் ஏவப்பட்ட அந்த விண்கலம் பூமி மீது மோத வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்ட சிறுகோள் மீது இன்று வெற்றிகரமாக மோதப்பட்டது.

பூமியை தாக்க வந்த சிறுகோளை வீழ்த்திய நாசா! | Nasa Shot Down Asteroid Came To Attack The Earth

இதன் மூலம் அந்த சிறுகோளின் பாதை பூமியில் இருந்து திசைதிருப்பப்பட்டுள்ளது. இதனால், அந்த சிறுகோளால் பூமிக்கும் ஏற்படவிருந்த ஆபத்து முறியடிக்கப்பட்டது.

விண்கலம் வெற்றிகரமாக சிறுகோள் மீது மோதிய நிலையில் அந்த கோளின் பயண திசை விரைவில் மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வீடியோ இணையதளத்தில் வேகமாக பரவிவருகிறது.