அனைத்து தமிழ் மக்களும் வெட்கப்பட வேண்டும்; கொந்தளித்த சரத் ​​வீரசேகர

0
434

இது மிக மோசமான துஷ்ட செயல் எனவும் தமிழ் மக்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று காலை முல்லைத்தீவு – குருந்தூர்மலை தேசிய மரபுரிமைச் சின்னங்களைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இதன்போதே ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் சரத் வீரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார். அத்துடன் இலங்கை ஒரு பௌத்த நாடு என தெரிவித்த அவர், குருந்தூர் மலை 2000 ஆம் ஆண்டுகள் பழமையானது எனவும் குறிப்பிட்டார்.

அத்தோடு குருந்தூர் விகாரையில் புனித தாதுவை பிரதிக்ஷ்டை செய்ய இடமளிக்காதது குறித்து முழு தமிழ் மக்களும் வெட்கப்படவேண்டுமெனவும் அவர் கூறினார்.