தீக்கிரையான மிகப்பெரிய உணவுச் சந்தை: கரும்புகையால் சூழ்ந்த பாரிஸ்

0
263

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் Orly விமான நிலையம் அருகே அமைந்துள்ள, உலகின் மிகப்பெரிய சந்தைகளில் ஒன்றான ருங்கிஸ் சர்வதேச சந்தையின் கட்டிடம் ஒன்றில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.

7000 சதுர மீற்றர் பரப்பளவில் தீ பரவியது மற்றும் பாரிஸ் முழுவதும் இருண்டுபோகும் அளவிற்கு கரும்புகை சூழ்ந்தது. இதனையடுத்து, வெளியான தகவலின் அடிப்படையில் நூறு தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவர களத்தில் குவிக்கப்பட்டனர்.

இதனிடையே, பாரிஸின் தெற்கு புறநகர்ப் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பு கருதி அப்பகுதியிலிருந்து வெளியேறுமாறு தீயணைப்பு வீரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பிரான்சில் தீக்கிரையான மிகப்பெரிய உணவுச் சந்தை: கரும்புகையால் சூழ்ந்த நகரம் | Paris Market Massive Fire Breaks

தீ கிட்டத்தட்ட கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தில் எவரும் காயமடையவில்லை என தீயணைப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

234 ஹெக்டேர் பரப்பளவுடன் பரந்து விரிந்து கிடக்கும் இந்த மொத்த விற்பனைச் சந்தையில், 12,000க்கும் அதிகமானவர்கள் பணிபுரிகின்றனர். என்பது குறிப்பிடத்தக்கது.