கோட்டாபயவின் வாக்குறுதியை காப்பாற்ற 600 கோடி இழந்த அரச நிறுவனம்!

0
347

முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் வாக்குறுதியை நிறைவேற்றும் நோக்கில் செயற்பட்டமையினால் 600 கோடி ரூபாய் நட்டம் ஏற்பட்டுள்ளதாக சதொச தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின் போது குறைந்த விலையில் பொருட்களை வழங்குவதாக மேடைகளில் வாக்குறுதி வழங்கியுடன் தேர்தல் விஞ்ஞாபனத்திலும் குறிப்பிட்டிருந்தார்.

அதிக விலையில் இறக்குமதி

கோட்டாபயவின் வாக்குறுதியை காப்பாற்ற 600 கோடியை இழந்த அரச நிறுவனம் | Sri Lanka Political Issues Food Prices

இதற்கமையமைய இறக்குமதி செய்யப்பட்ட மீன்டின் மற்றும் பருப்பு என்பன குறைந்த விலையில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

அதிக விலையில் பொருட்களை இறக்குமதி செய்து குறைந்த விலையில் மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இறக்குமதியாளர்களிடம் இருந்து ஒரு கிலோ பருப்பு 154 ரூபாவுக்கு கொள்வனவு செய்து 65 ரூபாவுக்கு மக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

600 கோடி நட்டம்

கோட்டாபயவின் வாக்குறுதியை காப்பாற்ற 600 கோடியை இழந்த அரச நிறுவனம் | Sri Lanka Political Issues Food Prices

மீன்டின் ஒன்று 210 ரூபாவுக்கு கொள்வனவு செய்யப்பட்டு 100 ரூபாவுக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக 600 கோடி ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக சதொச நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆட்சியின் போது ராஜபக்சர்கள் தங்களின் இருப்புக்களை தங்க வைத்துக் கொள்வதற்காக மேற்கொண்ட பல்வேறு செயற்பாடுகள் இன்று நாடு வங்குரோத்து நிலையை அடைய காரணமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.