மாவா போதை பொருளுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் ; யாழ் பிரபல பாடசாலை மாணவர்கள் கைது!

0
393

யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் மாணவர்கள் நால்வர் மதுபானம் மற்றும் மாவா போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

4 பேரும் கடுமையாக எச்சரிக்கப்பட்ட பின்னர் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாட்டம்: யாழில் பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் 4 மாணவர்கள் கைது! | 4 School Students Arrest In Jaffna Drugs Brithday

இன்று நண்பகல் யாழ்ப்பாணம் பிறவுண் வீதி ஆலய கேணியடியில் மாணவர்கள் போதைப்பொருள் பயன்பாட்டில் ஈடுபட்டதாக என பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது.

அங்கு விரைந்து சென்ற பொலிஸ் புலனாய்வு பிரிவினர் மாணவர் ஒருவர் மாவா போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நிலையில் கைது செய்தனர்.