இலங்கையின் பிரபலமான யானை பந்துல மரணம்; சோகத்தில் மக்கள்

0
233

இலங்கையில் பிரபலமான யானைகளின் ஒன்றான பந்துல நேற்று உயிரிழந்துள்ளதாக மிருகக்காட்சி சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் நீண்ட நாட்களாக மக்களை மகிழ்வித்த பந்துல நேற்று உயிரிழந்துள்ளது.

79 ஆண்டுகளாக மிருகக்காட்சி சாலையில் வாழ்ந்த யானை பலரின் அன்பை பெறுள்ளது.

மருத்துவ சிகிச்சை

இலங்கையில் பிரபலமான பந்துல எனும் யானை மரணம் - கவலையில் மக்கள் | Sri Lanka Famous Places Elephant Death Today

யானையின் கால்கள் செயலிழந்ததால் கடந்த சில நாட்களாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளது.

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் மிகவும் உயரம் கொண்ட யானையாக பந்துல பெயரிடப்பட்டுள்ளது. 9 அடி உயரம் கொண்டதாகும்.

1949 ஆம் ஆண்டு முதல் தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் பந்துல என்ற யானை வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.  

கவலையில் மக்கள்

இலங்கையில் பிரபலமான பந்துல எனும் யானை மரணம் - கவலையில் மக்கள் | Sri Lanka Famous Places Elephant Death Today

இலங்கையில் மிகவும் பிரசித்தம் பெற்ற ஒன்றாக யானைகள் உள்ளன. இதனை பார்வையிட பல வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வருகின்றனர்.

இந்நிலையில் பந்துலவின் மரணம் உள்நாட்டவர்களை மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது.