காற்றில் திடீரென பறந்த பெண்… இணையத்தில் வைரலாகும் காணொளி

0
243

அண்மை நாட்களில் நம் கண்களையே நம்ப முடியாத அளவுக்கு பல விசித்திர காணொளிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

ஒரு நபர் காற்றில் மிதப்பதையோ அல்லது மிதந்தபடி ஓர் இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வதையோ நாம் திரைப்படம், தொலைக்காட்சி, அல்லது வலைத்தொடர்களில் தான் பார்த்திருக்கிறோம்.

இருப்பினும், தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ள காணொளியில் இது போன்ற ஒரு காட்சியை காண முடிகின்றது.

ஒரு பெண் காற்றில் தொங்கிக்கொண்டு இருப்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது.

இதை அங்கு அருகில் இருப்பவர்களாலும் நம்ப முடியவில்லை. அவரைப் பார்க்க அருகில் இருந்து மக்கள் கூடினர்.

இந்த செயலை அந்தப் பெண் எப்படிச் செய்தார் என்பது இப்போது விவாதப் பொருளாகவே உள்ளது. இந்த வீடியோ அமெரிக்காவில் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

காற்றில் திடீரென பறந்த பெண்... இணையத்தில் அச்சிரியத்தை ஏற்படுத்திய காணொளி | Girl Suddenly Flew In The Air America Viral Video

மேலும், அங்கு சிலர் இப்போதே ஹாலோவீனுக்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

அந்த ஏற்பாடுகளில் ஒரு அங்கமாகவும் இது இருக்கலாம். எப்படி இருந்தாலும் இந்த வீடியோ காண்பவர்களை வியக்க வைக்கிறது.

@horrorprops

♬ Stranger Things – Kyle Dixon & Michael Stein

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் எந்த வித பிடிமானமும் இன்றி ஒரு பெண் காற்றில் தொங்கிக் கொண்டிருப்பதை காண முடிகின்றது.

அவர் இரண்டு கைகளையும் விரித்து, அதே இடத்தில் குதிகாலின் துணை கொண்டு காற்றில் நிற்கிறார். ஹாலோவீன் வருவதற்கு இன்னும் பல நாட்கள் உள்ளன.

இந்த முறை ஹாலோவீனின் கருப்பொருள் அதாவது தீம், Netflix இன் பிரபலமான இணையத் தொடரான ​​ஸ்ட்ரேஞ்சர் திங்ஸை அடிப்படையாகக் கொண்டது. இதை மனதில் வைத்து இவர் இப்படிப்பட்ட செயலை செய்துள்ளாரோ என்ற எண்ணம் பலருக்கு உள்ளது.

பெண் காற்றில் ஆடும் இந்த வீடியோவை முதலில் சமூக ஊடக தளமான Tiktok இல் டேவ் மற்றும் ஆப்ரே சமீபத்தில் பகிர்ந்துள்ளனர். இங்கிருந்து மீண்டும் அது பல்வேறு தளங்களில் வைரலானது.

இதுவரை இந்த வீடியோ 1.5 லட்சத்திற்கும் அதிகமான முறை பார்க்கப்பட்டுள்ளது. இந்த வீடியோவுக்கு நெட்டிசன்களும் பல விதமான கமெண்டுகளை அளித்து வருகிறார்கள்.