வடமாகாண புகைரத சேவை சில மாதங்களுக்கு நிறுத்தப்படும்

0
49

வடமாகாணத்திற்கான புகைரத சேவைகள் எதிர்வரும் 2023ம் ஆண்டு ஜனவரி மாதம் தொடக்கம் 5 மாதங்களுக்கு நிறுத்தப்படும் என்று போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார் .

என ஊடகத்துறை மற்றம் போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்ததன கூறியுள்ளார். இந்திய நிதி உதவியின் கீழ் வடமாகாணத்திற்கான புகைரத மார்க்கம் புனரமைப்புச் செய்யப்படவிருக்கின்றது.

இதன் பணிகள் ஜனவரி மாதத்தில் தொடங்கும் எனவம் அமைச்சர் கூறியிருக்கின்றார். பாராளுமன்றத்தில் நேற்று தமிழ் பத்திரிகைகளின் ஊடகவியலாளர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

வடமாகாணத்திற்கான புகைரத சேவை சில மாதங்களுக்கு நிறுத்தப்படும் | Introduction To Sri Lanka In Geneva

இது தொடர்பில் அவர் தெரிவிக்கையில், இந்தியாவின் நிதி உதவித் திட்டத்தின் கீழ் வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்புப் பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்பட இருக்கின்றன.

வடக்கு மக்களுக்கு சிறந்த ரயில் சேவையை பெற்றுக் கொடுக்கும் நோக்கிலேயே வடக்குக்கான ரயில் பாதை புனரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. மேற்படி புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ஜனவரி மாதம் முதல் ஐந்து மாதங்களுக்கு வடக்கிற்கான ரயில் சேவைகள் நிறுத்தப்பட உள்ளன.