லிட்ரோ நிறுவன தலைவர் வெளியிட்ட தகவல்!

0
283

நாட்டில் தற்போது நாளாந்த எரிவாயு தேவை குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு டிசம்பர் மாதம் வரை புதிய எரிவாயு சிலிண்டர்கள் உள்நாட்டு சந்தைக்கு விநியோகிக்கப்பட மாட்டாது என்று லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்களுக்கு இலங்கையில் வசிக்கும் அவர்களது உறவினர்களுக்கு புதிய சிலிண்டர்களை ஓடர் (orders) செய்யும் லிட்ரோ கம்பனியின் செயற்திட்டமே இதற்குக் காரணம்.

லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் வெளியிட்ட முக்கிய தகவல்! | The President Of Litro

நாடு எதிர்நோக்கும் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக லிட்ரோ நிறுவனம் அண்மையில் இந்த முறையை அறிமுகப்படுத்தியது.

இதன்படி, வெளிநாடுகளில் வசிக்கும் கணிசமான இலங்கையர்கள் டொலர்களை செலுத்தி புதிய சிலிண்டர்களை ஓடர் (orders) செய்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

நாளாந்த எரிவாயு தேவை சற்று குறைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சுட்டிக்காட்டியுயள்ளமை குறிப்பிடத்தக்கது.