மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளர்கள் சிரமம்!

0
59

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நடைபெறும் ஒவ்வொரு செயல்பாடும் கவலையளிப்பதாக சமூக ஆர்வலகள் வேதனை வெளியிட்டுள்ளனர்.

களுதாவளையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஒரு மிருகவைத்திய ஊழியர் தனது 72 வயதான மனைவிக்கு சிறுநீரக கல் காரணமாக கடந்த இரண்டு வருடமாக அங்கு நடைபெற்று வரும் கிளினிக் ஒன்றிற்காக சென்று வருகிறார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  இடம்பெறும் அவலங்கள்! | Disasters In Batticaloa Teaching Hospital

கடைசியாக நடைபெற்ற கிளினிக்கில் குறிப்பிட்ட நோயாளியை 20/09/22 அன்று அவருக்கு சிகிச்சையளிக்க நோயாளர் விடுதியில் அனுமதிக்குமாறு மருத்துவர் கூறியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து 20/09/22 அன்று காலை 9.00 மணிக்கு வயதான அவர் மனைவியை அழைத்து சென்று நோயாளர் விடுதியில் சேர்த்துவிட்டு வீடு திரும்பியிருந்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  இடம்பெறும் அவலங்கள்! | Disasters In Batticaloa Teaching Hospital

சிகிச்சையளிக்க முடியாது; அலைக்கழிக்கப்படும் நோயாளர்

நோயாளர் விடுதிக்கு போனவரை அங்குள்ள வைத்தியர் சம்பந்தப்பட்ட வைத்தியர் வெளிநாடு சென்றுள்ளபடியால் இப்போது சிகிச்சையளிக்க முடியாது, அவர் நாடு திரும்பியதும்தான் சிகிச்சை அளிக்கமுடியும் என கூறி ஊழியர்கள் அவரை வீட்டுக்கு அனுப்பியுள்ளனர் .

எதிர்வரும் டிசம்பர் மாதம் 12ம் திகதி வரும்படி கூறி அன்று மதியம் வீட்டுக்கு திருப்பி அனுப்பி இருக்கிறார்கள்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில்  இடம்பெறும் அவலங்கள்! | Disasters In Batticaloa Teaching Hospital

இந்த நிலையில் உண்மையில் ஒரு சிறுநீரகத்தில் கல் உள்ள ஒரு நோயாளியை இரண்டு வருடமாக இப்படி ஏமாற்றி வருவது நியாயமா? உண்மையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் என்ன நடக்கிறது?வைத்தியசாலை நிர்வாகம் இதற்கு என்ன நியாயம் சொல்லப்போகிறது? என முகநூல் வாசி ஒருவர் கவலை வெளியிட்டுள்ளார்.