யாழில் தப்பி ஓடிய கஞ்சா கடத்தல்காரர்கள் !

0
42

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து யாழ்.பருத்தித்துறை – சக்கோட்டை பகுதியில் சுமார் 42 கிலோ கஞ்சா இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

யாழில்  தலைதெறிக்க ஓடிய  கடத்தல்காரர்கள் ! | Smugglers Who Ran Away In Jaffna

இராணுவத்தினர் சுற்றிவளைப்பு

சக்கோட்டை கடற்கரையில் படகில் இருந்து கஞ்சப் பொதியை இறக்கிக் கொண்டிருந்தபோது படையினர் சுற்றி வளைத்துள்ளனர்.

படையினர் வருவதை அவதானித்த கஞ்சா கடத்தல் காரர்கள் ஒருசில பொதிகளை மட்டும் இறக்கிய நிலையில் மீண்டும் தலை தெறிக்க தப்பியோடியுள்ளனர்.

யாழில்  தலைதெறிக்க ஓடிய  கடத்தல்காரர்கள் ! | Smugglers Who Ran Away In Jaffna

தப்பிச் சென்றவர்களை கைது செய்யும் நடவடிக்கைகளும் படையினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், கஞ்சா பொதியையும் படையினர் கைப்பற்றியுள்ளனர்.

யாழில்  தலைதெறிக்க ஓடிய  கடத்தல்காரர்கள் ! | Smugglers Who Ran Away In Jaffna

மேலும் கைப்பற்றப்பட்ட கஞ்சாவை மதுவரி திணைக்களத்தினூடாக நீதிமன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.