யாழிற்கு முடிந்தால் ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள்!

0
440

யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு முடிந்தால் இந்தியாவுடன் கலந்துரையாடி ஒரு விமானத்தையாவது கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சிவில் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா (Nimal Siripala De Silva) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் வலியுறுத்தினார்.

அவ்வாறு விமானத்தை கொண்டு வந்தால் அங்கிருந்து விமான சேவைகளை மீள ஆரம்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுக்கின்றோம் என்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் குறிப்பிட்டார்.

யாழிற்கு முடிந்தால் ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள்! த.தே.கூவிடம் அமைச்சர் வலியுறுத்தல் | Jaffna Airport Flight Minister Nimal Requests Tna

நாடாளுமன்றத்தில் நேற்று (22-09-2022) வியாழக்கிழமை சிவில் விமான சேவைகள் மீதான ஒழுங்குவிதிகள் மற்றும் இலங்கை தொலைக்காட்சி சேவைகள் மீதான ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

யாழிற்கு முடிந்தால் ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள்! த.தே.கூவிடம் அமைச்சர் வலியுறுத்தல் | Jaffna Airport Flight Minister Nimal Requests Tna

அவர் மேலும் கூறுகையில்,

யாழ்ப்பாண விமான நிலையத்திற்கு பெருமளவான நிதி செலவழிக்கப்பட்டுள்ளது. அந்த விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதற்காக அதனை திறந்து வைத்தோம்.

யாழ்ப்பாண விமான நிலையத்தின் சேவைகளுக்காக யாழ்ப்பாணத்தில் வசிக்கும் இளைஞர்களையே நியமித்தோம். விரைவில் அதனை திறக்குமாறும் விமான நிலையத்திற்கு விமானங்களை கொண்டு வருவதாகவும் பல்வேறு நிறுவனங்கள் உறுதியளித்தன.

யாழிற்கு முடிந்தால் ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள்! த.தே.கூவிடம் அமைச்சர் வலியுறுத்தல் | Jaffna Airport Flight Minister Nimal Requests Tna

ஆனால் கடந்த காலங்களில் எவரும் விமானத்தை கொண்டு வரவில்லை. விமானங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்க முடியுமென்றால் முதலில் விமானங்களை கொண்டு வாருங்கள். அதற்கு பின்னர் தேவையான வேலைகளை நாங்கள் செய்கின்றோம் என்றார்.

இதன்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் சிறிதரன் குறுக்கிட்டு இந்தியாவின் இந்திய எயார்வேஸ் நிறுவனம் மற்றும் இண்டிக்கா என்பன விமானத்தை கொண்டு வர தயாராகவே இருக்கின்றன.

இதனால் யாரும் விமானத்தை கொண்டு வரவில்லை என்று கூற வேண்டாம் என்றார்.

யாழிற்கு முடிந்தால் ஒரு விமானத்தையாவது கொண்டு வாருங்கள்! த.தே.கூவிடம் அமைச்சர் வலியுறுத்தல் | Jaffna Airport Flight Minister Nimal Requests Tna

மீண்டும் உரையாற்றிய அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா கூறுகையில்,

விமானம் வரும் என்று நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தோம். பல்வேறு செய்திகளையும் அனுப்பினோம். ஆனால் வரவில்லை. பிரச்சினைகள் இருந்தால் பேசி தீர்த்துக்கொள்ளலாம்.

உண்மையிலேயே விமானங்களை கொண்டு வர முடியுமென்று உறுதிப்படுத்தினால் அதற்கான நடவடிக்கைகளை எடுக்கலாம். அங்கு பெருமளவில் செலவழிக்கப்பட்டுள்ளது.

வேண்டுமென்றால் இந்தியாவுடன் மற்றும் இந்திய விமான சேவையுடன் கதைத்து விமானங்களை அனுப்புமாறு கூறுங்கள். பிரச்சினைகள் இருந்தால் எங்களுடன் கதைக்குமாறு கூறுங்கள்.

முடிந்தால் ஒரு விமானத்தையேனும் கொண்டுவந்து காட்டுங்கள். நாங்கள் எங்கள் பக்கத்தில் செய்ய வேண்டியவற்றை செய்துள்ளோம். ஆனால் அந்தப் பக்கத்தில் எதுவும் செய்யப்படவில்லை என்றார்.