ஓடும் ரயிலில் துடிதுடித்த கர்ப்பிணி பெண் – மருத்துவராக மாறிய மாணவி!

0
498

28 வயதான கர்ப்பிணிக்கு ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த பெண்ணுக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

ஆந்திராவில் உள்ள GITAM மருத்துவக் கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும் மாணவி சுவாதி ஓடும் ரயிலில் தன்னுடன் பயணித்த சக பயணிக்கு எதிர்பாராத விதமாக பிரசவ வலி வரவே நல்ல முறையில் அவருக்கு பிரசவம் பார்த்துள்ளார்.

செகந்திராபாத்தில் இருந்து விசாகப்பட்டினம் செல்லும் டூரண்டோ விரைவு ரயிலில் 28 வயது கர்ப்பிணி பெண் தனது கணவருடன் பயணம் செய்துள்ளார்.

அப்போது அவருக்கு திடீரென்று எதிர்பாராத விதமாக பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.

Gallery

இதனை சற்றும் எதிர்பாராத அந்த பெண்ணின் கணவர் மற்றும் சுற்றி இருந்தவர்கள் செய்வதறியாது திகைத்து நின்றனர்.

அப்பொழுது அதே ரயிலில் சுவாதி என்ற இறுதியாண்டு மருத்துவம் படிக்கும் மாணவியும் பயணம் செய்துள்ளார்.

ரயிலில் ஒரு மருத்துவர் பயணம் செய்வதை அறிந்த அந்த பெண்ணின் கணவர் உடனடியாக சுவாதியின் உதவியை நாடியுள்ளார்.

இதைக் கேட்டு உடனடியாக செயல்பட்ட சுவாதி அந்த பெண்ணிற்கும் குழந்தைக்கும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் பாதுகாப்பாக பிரசவம் பார்த்து தாயையும் குழந்தையையும் காப்பாற்றியுள்ளார்.

சுவாதியின் தைரியமான மனிதநேயமிக்க செயலை பாராட்டிய அவரது GITAM கல்லூரி பேராசிரியர் கீதாஞ்சலி பத்மநாபன் என்பவர் தான் இத்தகவலை ட்விட்டர் வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அவர் பகிர்ந்த சில மணி நேரங்களிலேயே இந்த செய்தி மிகப்பெரிய அளவில் வைரல் ஆகி பலரது பாராட்டையும் பெற்றுள்ளது.