டுபாய் தடுப்பு முகாமில் 85 இலங்கைப் பெண்கள்….

0
56

டுபாயில் உள்ள தடுப்பு முகாமில் 85 இலங்கைப் பெண்கள் அறை ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த அறையில் பலவிதமான வன்முறைகளுக்கு முகங்கொடுத்த பெண் ஒருவர் எமது செய்தி சேவைக்கு இது தொடர்பான தகவலை வெளிப்படுத்தினார்.

தம்புள்ளையில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஊடாக வீட்டுப் பணிப் பெண்ணாகச் சென்ற தம்புலு ஓயா பகுதியைச் சேர்ந்த லலிதா பத்மி, டுபாயில் தடுப்பு முகாமில் மூன்று மாதங்கள் தங்கியிருந்து அண்மையில் நாடு திரும்பினார்.

பணிப்பெண்களுக்கான விசேட தகவல் | Special Information For Maids

இந்தநிலையில், தாம் அனுபவித்த விரும்பத்தகாத அனுபவங்கள் குறித்து வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம், தம்புள்ளை காவல்துறை மற்றும் வெளிநாட்டில் உள்ள வேலை முகவரகத்தில் தெரிவித்த போதிலும் இதுவரை தமக்கு நீதி கிடைக்கவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தம்புள்ளையில் உள்ள குறித்த தனியார் வெளிநாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தினால் டுபாய்க்கு அனுப்பப்பட்ட குறித்த பெண்ணின் சகோதரியும் டுபாயில் அவதிப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பணிப்பெண்களுக்கான விசேட தகவல் | Special Information For Maids