எம்பிக்கள் செலுத்த வேண்டிய 11 கோடி; 30 நாட்கள் காலக்கெடு!

0
53

2022 ஜூலை வரை அரசாங்க குடியிருப்பில் வசிக்கும் 76 அமைச்சர்கள் பதினோரு கோடியே 8 லட்சம் ரூபாய் தண்ணீர் கட்டணத்தை செலுத்தவில்லை என கூறப்படுகின்றது.

சபாநாயகருக்கு கடிதம்

இந்நிலையில் , இந்த கட்டணங்களை அவர்கள் முப்பது நாட்களுக்குள் செலுத்தவில்லை என்றால். ஒக்டோபர் 15 ஆம் திகதி அவர்களுக்கான நீர் துண்டிக்கப்படும் என சபாநாயகருக்கு நீர்வழங்கல் அதிகார சபை கடிதம் அனுப்பியுள்ளது.

COM/AGM/CR28 என்ற எண்ணைக் கொண்ட 15.09.2022 திகதி இடப்பட்ட இந்தக் கடிதத்தில்,

தற்போதுள்ள 34 அமைச்சர்கள் 4 கோடியே 4 இலட்சமும், 27 முன்னாள் அமைச்சர்கள் 4 கோடியும், உயிரிழந்த 15 அமைச்சர்கள் 3 கோடியும் செலுத்த வேண்டியுள்ளது .

11 கோடி ஏய்ப்பு செய்த எம்பிக்கள்;  30 நாட்கள் காலக்கெடு! | 11 Crore Evaded Mps30 Days Deadline

இது தொடர்பாக அமைச்சரவைப் பத்திரம் அனுப்பி முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயிரிழந்த அமைச்சர்களிடம் இருந்து வரவேண்டிய பணத்தை வசூலிக்குமாறு நீர்வழங்கல் அதிகார சபை சபாநாயகருக்கு அறிவித்துள்ளது.