மீண்டும் சர்ச்சையில் டயனா கமகே

0
57

நாட்டில் மதுபான நிலையங்களை இரவு 10 மணிவரை திறந்து வைக்க வேண்டும் என்றும், பல்பொருள் அங்காடிகளுக்கு பியர் விற்பனை உரிமம் வழங்க வேண்டும் என்றும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவித்துள்ளார்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இராஜாங்க அமைச்சர் டயனா கமகே | Diana Gamage Gets Into Controversy Cannabis

இன்றைய தினம் (21-09-2022) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரச வருவாய் அதிகரிப்பு தொடர்பான இன்றைய ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே, அவர் இதனை தெரிவித்தார்.

மீண்டும் சர்ச்சையில் சிக்கிய இராஜாங்க அமைச்சர் டயனா கமகே | Diana Gamage Gets Into Controversy Cannabis

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு மனோபாவத்தில் மாற்றம் அவசியம். கஞ்சா என்பது வெறுமனே வீதியில் பாவித்து சுற்றித்திரியும் போதைப்பொருளல்ல.

நான் அந்நியச் செலாவணியைப் பற்றி பேசுகிறேன். சில வித்தியாசமான விஷயங்களைப் பற்றி அதன் மறுபக்கத்தைப் பற்றி பேசுகிறேன் எனவும் தெரிவித்தார்.