12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மந்திரவாதி கைது!

0
184

12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள மந்திரவாதி எனக் கூறப்படும் ஒருவரை விளக்கமறியலில் வைத்துள்ளனர்.

உத்தரவு

குளியாப்பிட்டிய நீதிவான் முன்னிலையில் அந் நபரை முன்னிலைப்படுத்துமாறு குளியாப்பிட்டிய பிரதான நீதவான் ரந்திக லக்மால் ஜயலத் உத்தரவிட்டுள்ளார்.

தனது மந்திர சக்தியால் நோய்களைக் குணப்படுத்துவதாகக் கூறும் மந்திரவாதி ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இரு சிறுமிகளிடம் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையில் சந்தேக நபரான மந்திரவாதி கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர்.