மன்னர் சார்லஸின் மெய்க்காப்பாளர்கள் போலி நாடகம் அம்பலம்!

0
251

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் (King Charles III) மெய்க்காப்பாளர்கள் போலி கைகளை பயன்படுத்துவதாக சில அரச ரசிகர்கள் ஊகித்துள்ளனர்.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு உயிரிழந்ததை தொடர்ந்து அவரது மகன் மூன்றாம் சார்லஸ் (King Charles III) மன்னராக பொறுப்பேற்று கொண்டார்.

மூன்றாம் சார்லஸ் (King Charles III) மன்னராக பொறுப்பேற்று இரண்டு வாரங்களே ஆகும் நிலையில் நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட சந்தர்ப்பங்களில் பொதுமக்களை சந்தித்து உரையாற்றினார்.

இந்நிலையில், கழுகு பார்வை கொண்ட அரச ரசிகர்கள் மன்னருடனான இத்தகைய சந்திப்பு சந்தர்ப்பங்களின் போது மன்னரை சுற்றியுள்ள பாதுகாப்பு மெய்க்காப்பாளர்கள் குறித்த விசித்திரமான ஒன்றைக் கவனித்துள்ளனர்.

இது தொடர்பாக சமூக ஊடகங்களில் பேசி வரும் பயனர்கள் அரச மெய்க்காப்பாளர்கள் உடனடி செயல் திட்டத்திற்காக போலி கைகளை பயன்படுத்தி வருவதாக ஊகித்துள்ளனர்.

பலர் தங்கள் உண்மையான கைகளை மறைப்பதற்கான ஏமாற்று வேலைகளாக இருக்கலாம் என்றும் இதன் முலம் மெய்க்காப்பாளர்கள் திடீரென தேவைப்பட்டால் செயலில் இறங்க தயாராக இருக்க முடியும் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

மன்னரின் மெய்க்காப்பாளர்களின் போலி நாடகம் அம்பலம்! | King S Bodyguards Fake Drama Exposed

அத்துடன் சமூக வலைதளத்தில் எழுதியுள்ள பயனர் ஒருவர் மெய்க்காப்பாளர்களின் வெவ்வேறு பிடிகளைக் கவனியுங்கள். திறந்த உள்ளங்கையின் பிடியில் எந்த மாற்றமும் இல்லை.

மேலும் ஜாக்கெட்டில் ஒரு வீக்கம் போல் தெரிகிறது என எழுதியுள்ளார். பல ஆண்டுகளாக மெய்க்காப்பாளர்கள் தங்கள் கோட்டுகளின் கீழ் FN-P90 துப்பாக்கி போன்றவற்றை வைத்திருப்பதற்காக போலியான கைகள் மற்றும் ஆயுதங்களை பயன்படுத்துவதாக வதந்திகள் உள்ளன.

இருப்பினும், இது ஒருபோதும் நிரூபிக்கப்படவில்லை அல்லது உறுதிப்படுத்தப்படவில்லை.