மின்வெட்டு நேரம் தொடர்பில் முக்கிய தகவல்!

0
48

மின்வெட்டு நேரத்தை நீடிப்பதற்கு இலங்கை மின்சார சபை (CEB) விடுத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) அனுமதி மறுத்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, இரண்டு மணித்தியாலங்கள் இருபது நிமிடங்களுக்கு மின்வெட்டை மேற்கொள்ளுமாறு இலங்கை மின்சார சபை கோரியுள்ளது.

எனினும், மின்சாரத் தடை நீடிக்கப்படுவதற்கான, உரிய காரணத்தை மின்சார சபை சமர்ப்பிக்கவில்லை. எனவே, ஒரு மணிநேரம் இருபது நிமிடங்களுக்கு நடைமுறையில் உள்ள திட்டமிடப்பட்ட மின்வெட்டைத் தொடர மட்டுமே ஆணைக்குழுவால் அனுமதி வழங்கப்பட்டது.

மின்வெட்டு நேரம் தொடர்பில் வெளியான முக்கிய தகவல்! | Important Information About Power Outage Time

அதன்படி, இன்று வியாழக்கிழமைக்கான மின்வெட்டு நேர விபரங்களை இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

இதற்கமைய, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்குட்பட்ட பகுதிகளில் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையான காலப்பகுதிக்குள் 1 மணித்தியாலமும் 20 நிமிடங்களும் மின்வெட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.