தவறான உறவுக்கு மறுத்த பெண்; அரங்கேறியகொலை

0
59

தவறான உறவுக்கான யோசனையை நிராகரித்த 32 வயதான ஆடை தொழிற்சாலையில் தொழில் புரிந்து வந்த பெண்ணை கொலை  செய்த நபரை இன்று காலை கைது செய்ததாக அத்தனகல்லை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு பைனஸ் (ஏங்கு மரம்) தோட்டத்தில் மறைந்திருந்த போதே சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இரண்டு பிள்ளைகளின் தாய்

தவறான உறவுக்கு மறுத்த பெண்ணை கொலை செய்த நபர் | Man Killed Woman Refused Have Wrong Afire

அலவல ஹெபனாகந்த பிரதேசத்தை சேர்ந்த 32 வயதான எச்.ஆர்.ஷைமலி என்ற பெண் இரண்டு பிள்ளைகளின் தாய் எனவும் அவர், வத்துப்பிட்டிவல வர்த்தக வலயத்தில் உள்ள ஆடை உற்பத்தி நிறுவனம் ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் தொழிற்சாலையில் பணி முடிந்து நேற்று மாலை வீடு திரும்பும் வழியில் ஹெபனாகந்த பிரதேசத்தில் வீதியில் காத்திருந்த சந்தேக நபர், பெண்ணை கத்தியால் குத்தி படுகாயத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.