ஜப்பான் பிரதமர் அலுவலகம் முன் ஒருவர் தீக்குளித்து தற்கொலை!

0
130

ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேக்கு (Shinzo Abe) அரசு சார்பில் இறுதிசடங்கு நடத்தப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றது அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானில் நீண்ட காலம் பிரதமராக பணியாற்றிய அபே (Shinzo Abe) கடந்த ஜூலை மாதம் 8 ஆம் திகதி பிரச்சாரத்தின் போது சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.

அவருக்கு வருகிற 27ஆம் திகதி அரசு சார்பில் இறுதி சடங்கு நடத்தப்படவுள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து டோக்கியோவில் உள்ள பிரதமர் அலுவலகம் அருகே ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.

மேலும் அவரை காப்பாற்ற முயன்ற காவல்துறை அதிகாரி காயமடைந்தார்.

பிரதமர் அலுவலகம் முன்பு ஒருவர் தீக்குளித்து தற்கொலை! | Fire In Front Of The Prime Minister S Office