யாழில் போதைக்கு அடிமையான 9 வயது சிறுமி

0
350

யாழ்.மாவட்டத்தில் 9 வயது சிறுமி உட்பட 5 பெண்கள் ஹெரோயின் பாவனைக்கு உள்ளாகி உள்ளதாக யாழ்.போதனா வைத்தியசாலையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவிக்கப்பட்டது.

கடந்த செவ்வாய்க்கிழமை யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி ஏற்பாடு செய்த போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான துறைசார்ந்த அதிகாரிகளுடனான கலந்துரையாடலிலே இந்த விடயம் தெரியவந்துள்ளது.

யாழில்  சிறுமி  ஒருவர் தொடர்பில் பகீர் தகவல்! | Information About A Girl In Yali

போதைப் பொருள் என அறியாமல் உட்கொண்ட சிறுமி

யாழ்.மாவட்டத்திலுள்ள ஒரு பிரதேச செயலர் பிரிவில் சிறுமி ஒருவர் போதைப் பொருள் என அறியாமல் அதனை தொடர்ச்சியாக உற்கொண்டமையால் போதைக்கு அடிமையாகியுள்ளார்.

யாழில்  சிறுமி  ஒருவர் தொடர்பில் பகீர் தகவல்! | Information About A Girl In Yali

குறித்த சிறுமி போதைப் பொருளுக்கு எவ்வாறு அடிமையானார் என ஆராய்ந்தபோது போதைப் பொருள் பயன்படுத்துவோர் பயன்படுத்திய சில பொருட்களை தவறுதலாக கையாண்டு சிறுமி அதனை வாயில் வைத்துள்ளார்.

அதன் தொடர்ச்சியாக போதைப் பொருள் அடிமைகள் பயன்படுத்திய பொருட்களை குறித்த சிறுமி பயன்படுத்தியமை தொியவந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.