அரசாங்க அறிவிப்பால் ஓய்வுபெறவுள்ள 300 வைத்திய நிபுணர்கள் !

0
333

அரச சேவையில் கடமையாற்றும் 60 வயதை பூர்த்தி செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளமையினால், எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு பின்னர் சுமார் 300 விசேட வைத்திய நிபுணர்கள் ஓய்வுபெறவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவர்கள் ஓய்வு பெற்றால் சுகாதாரத்துறை பெரும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாகவும் விசேட வைத்தியர்கள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. இது குறித்து விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ தெரிக்கையில்,

அரசாங்கத்தின் அறிவிப்பால்  ஒரே நாளில்  ஓய்வுபெறவுள்ள  300 விஷேட மருத்துவர்கள்! | 300 Special Doctors Who Will Retire

டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி

ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலான விசேட வைத்தியர்கள் ஓய்வு பெறும் தினமாக எதிர்வரும் டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய வைத்தியசாலையில் 43 விசேட வைத்தியர்களும், கண்டி தேசிய வைத்தியசாலையில் 30 விசேட வைத்தியர்களும், கராப்பிட்டி போதனா வைத்தியசாலையில் 17 வைத்தியர்களும், சிறுவர் வைத்தியசாலையில் 15 பேரும், அபேக்ஷா வைத்தியசாலையில் 9 பேரும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அறிவிப்பால்  ஒரே நாளில்  ஓய்வுபெறவுள்ள  300 விஷேட மருத்துவர்கள்! | 300 Special Doctors Who Will Retire

இதேவேளை, இந்நாட்டில் கடமையாற்றும் 33 இரத்த மாற்று நிபுணர்களில் 08 பேர் எதிர்வரும் 31ஆம் திகதி ஓய்வுபெறவுள்ளதாக அவர் தெரிவித்தார். அவர்களில் இருவர் ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டதாகவும், ஐந்து பேர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் இருவர் வெளிநாடு செல்லவுள்ள நிலையில், இரத்தம் ஏற்றுவதில் நிபுணத்துவம் பெற்ற 14 வைத்தியர்கள் மாத்திரமே இருப்பர் எனவும் அவர் கூறினார்.

அரசாங்கத்தின் அறிவிப்பால்  ஒரே நாளில்  ஓய்வுபெறவுள்ள  300 விஷேட மருத்துவர்கள்! | 300 Special Doctors Who Will Retire

அதேசமயம் சுகாதாரத் துறை எதிர்கொள்ளும் நெருக்கடியில் உள்ளமைக்கு சிறந்த உதாரணம் அபேக்ஷா வைத்தியசாலையில் எலும்பு மஜ்ஜை அறுவை சிகிச்சைகளுக்கு 2025 ஆம் ஆண்டில் திகதிகள் வழங்கப்படுவதை கூறலாம் எனவும் விசேட வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.