30 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை

0
338

ஜோர்தானில் நான்கு மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி 30 மணி நேரத்திற்கு பிறகு பச்சிளம் குழந்தை ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

பிறந்து வெறும் நான்கு மாதமேயான அந்த அற்புத குழந்தைக்கு தற்போது மலாக் என பெயர் சூட்டியுள்ளனர். தமது பிள்ளை கண்டிப்பாக உயிருடன் மீட்கப்படுவார் என தாம் நம்பியதாக, அதன் தாயார் 26 வயதான இஸ்ரா ரேத் கண்கள் பனிக்க தெரிவித்துள்ளார்.

பிள்ளை தாம் நம்பியது போல உயிருடன் மீட்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். செப்டம்பர் 13ம் திகதி அம்மானின் ஜபல் அல்-வெயிப்தேவில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்தது.

கட்டிட இடிபாடுகளில் சிக்கி 30 மணி நேரத்திற்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தை | Building Collapsed Of Rubble Baby Alive

இதில் சுமார் 25 பேர்கள் சிக்கிக்கொண்டதாக தகவல் வெளியானதை அடுத்து, தீவிர தேடுதல் நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டது. மட்டுமின்றி, நான்கு மாடி கொண்ட குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததையடுத்து, அந்த விவகாரம் தொடர்பில் மூவர் கைதாகியுள்ள உள்ளனர்.

இந்த நிலையில், சம்பவம் நடந்து சுமார் 30 மணி நேரத்திற்கு பின்னர், கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருந்த அந்த குழந்தையை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டுள்ளனர்.

இதனையடுத்து துரிதமாக செயல்பட்ட மருத்துவ உதவிக்குழுவினர், உடனடியாக குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டுசென்றுள்ளனர். தமது குழந்தையை கீழ்த்தளத்தில் குடியிருக்கும் தோழி ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு, வேலை நிமித்தம் வெளியே சென்றுள்ளார் இஸ்ரா ரேத்.

இந்த வேளையில் கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. குழந்தையை மீட்கும் வரையில் அவர் அப்பகுதியில் இருந்து விலகவே இல்லை என கூறப்படுகிறது.