பாடசாலை சிறுமிகளுக்கான ஆரோக்கியத்துவாய் தொடர்பில் சஜித் ஆவேசம்!

0
52

 “அன்று நான் சிறுமிகளுக்கு அவசியமான ஆரோக்கியத்துவாய் குறித்து பேசும் போது சிரித்தார்கள்.

ஆனால் இன்று சிறுமிகள் பாடசாலைக்குக் கூட செல்ல முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இப்போது பாடசாலை செல்லும் மாணவிகளுக்குத் தேவையான ஆரோக்கியத் துவாய் தொடர்பாக பாரிய பிரச்சினை எழுந்துள்ளதாகவும் இதன் காரணமாக அதிகமான மாணவிகள் பாடசாலை செல்ல முடியாத நிலை தோன்றியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாடசாலை சிறுமிகள் தொடர்பில் சஜித் ஆவேசம்! | Sajith Is Obsessed With School Girls

அன்று இது குறித்து தான் பேசியபோது அதிகமானவர்கள் கேலி செய்தாலும் இன்று அந்தப் பிரச்சினை உக்கிரம் அடைந்துள்ள பின்னனியில், உரிய அதிகாரிகள் அதற்கான தீர்வை துரிதமாக பெற்றுக் கொடுப்பதன் அவசியம் பற்றியும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.