ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்கும் உணவு

0
207

உடல் எடையை குறைக்க அனைவரும் பல வித முயற்சிகளை எடுக்கிறார்கள். உடல் எடை அதிகரிப்பதால் பல நோய்களை நாம் சந்திக்க வேண்டியுள்ளது.

நாம் நமது உடலை கட்டுகோப்பாக வைத்திருக்க என்ன செய்ய வேண்டும்? உடல் எடையைக் குறைக்கும் முயற்சியில், ​​உடற்பயிற்சியுடன் உணவுக் கட்டுப்பாட்டிலும் தனி கவனம் செலுத்த வேண்டும்.

ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்க வேண்டுமா? இரவில் உணவில் இதனை சாப்பிடுங்க | Weight Loss Tips Eat These Things In Night Meal

நல்ல உணவுமுறை உடல் எடையைக் குறைக்க உதவும். எந்த வேளையில் எப்படிப்பட்ட உணவை உட்கொள்ள வேண்டும் என்பதை நாம் எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

இரவு உணவு எப்போதும் இலகுவாக இருக்க வேண்டும் என்பது அனைவருக்கும் தெரியும். இதன் மூலம் நாம் போதுமான தூக்கத்தைப் பெறுவதோடு நமது எடையையும் நாம் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.

ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்க வேண்டுமா? இரவில் உணவில் இதனை சாப்பிடுங்க | Weight Loss Tips Eat These Things In Night Meal

இரவு உணவை, நாம் உறங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு உட்கொள்ள வேண்டும். அப்படி செய்வதால் நாம் முழுமையான தூக்கத்தை பெற முடியும். மறுபுறம், நாம் இரவு உணவை இலகுவாக உட்கொண்டால், அது எடையைக் குறைக்கவும் உதவுகிறது.

இரவு உணவில் நாம் எந்தெந்த உணவை உட்கொண்டால், அது நம் உடல் நலனுக்கு நல்லது என்பதை நாம் தெரிந்துகொள்வது மிக அவசியமாகும். அதை பற்றி இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

உடல் எடையை குறைக்க, இரவு உணவில் இதை உட்கொள்ளுங்கள்:  

ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்க வேண்டுமா? இரவில் உணவில் இதனை சாப்பிடுங்க | Weight Loss Tips Eat These Things In Night Meal

பச்சைப்பயறு: பயத்தம்பருப்பில் பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது உங்கள் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது. உடல் எடையை குறைக்க விருப்பம் கொண்டவர்கள், இரவு உணவில் இந்த பருப்பை உட்கொள்ளலாம். பயத்தம்பருப்பை வேக வைத்து தாளித்து ‘தால்’ செய்து சாப்பிடலாம்.

ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்க வேண்டுமா? இரவில் உணவில் இதனை சாப்பிடுங்க | Weight Loss Tips Eat These Things In Night Meal

ஜவ்வரிசி கிச்சடி: ஜவ்வரிசியில் கார்போஹைட்ரேட் நிறைந்துள்ளது. இதன் காரணமாக அதை சாப்பிடுவது இலகுவாக இருக்கும். எனவே, தினமும் இரவு உணவில் ஜவ்வரிசி கிச்சடியை உட்கொள்ளலாம்.

இதை செய்யும் முறை:

ஒரு கப் ஜவ்வரிசியை கழுவி 6 மணி நேரம் ஊற வைக்கவும். அதன் பிறகு கடாயில் நெய்யை சூடாக்கி சீரகம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து, பின் உருளைக்கிழங்கு, ஜவ்வரிசி, வேர்கடலை, சேர்த்து, பிறகு உப்பும் கொத்தமல்லியும் சேர்த்து வதக்கவும். விருப்பப்பட்டால், இதில் எலுமிச்சைப் பழ சாற்றையும் சேர்க்கலாம்.

ஒரே வாரத்தில் கொழுப்பை குறைக்க வேண்டுமா? இரவில் உணவில் இதனை சாப்பிடுங்க | Weight Loss Tips Eat These Things In Night Meal

பப்பாளி சாலட்: பப்பாளி மலச்சிக்கல் மற்றும் வாயு போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தருகிறது. மேலும் இது உடல் எடையை குறைக்க உதவுகிறது. நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் இரவு உணவில் இதை உட்கொள்ளலாம்.