சார்லஸ் மன்னரின் ஆட்சி… பாபா வாங்காவின் விசித்திரக் கணிப்பு

0
470

பாபா வங்காவின் கணிப்பு ஒன்று நிஜமானால் பிரித்தானிய மன்னர் சார்லஸின் ஆட்சிக்கு முடிவே இல்லை என ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

சார்லஸ் மன்னர் 97 வயது வரையில் உயிருடன் இருந்தால் மட்டுமே பாபா வங்கா கணித்துள்ள படி அவரது ஆட்சிக்கு முடிவே இருக்காது என கூறப்படுகிறது.

பாபா வங்காவின் கணிப்புகளில் ஒன்று 2046க்கு பின்னர் மனித குலம் 100 வயதைக் கடந்து வாழும் என்பதே. அறிவியலின் வளர்ச்சி, உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்டவைகளால் இது சாத்தியமாகும் எனவும் பாபா வாங்கா தெரிவித்துள்ளார்.

சார்லஸ் மன்னர் ஆட்சி... பாபா வங்காவின் விசித்திர கணிப்பு | Baba Vanga King Charles Rule Forever

இதன் அடிப்படையில் தற்போது மன்னர் சார்லசின் வயது 73 இன்னும் 24 ஆண்டுகள் அவர் உயிருடன் இருந்தால் அதாவது 97 வயது வரையில் அவர் ஆட்சியில் இருந்தால் பாபா வாங்கா குறிப்பிட்டுள்ளபடி கணிப்பு நிஜமாகும் என்கிறார்கள்.

இதனால் மன்னர் சார்லஸ் 97 வயது வரையில் உயிருடன் இருக்க வேண்டும் என்றால் மட்டுமே பாபா வங்காவின் கணிப்பின் பலனை பெறமுடியும்.

பாபா வங்கா 2022ல் மாபெரும் பெருவெள்ளத்தால் பூமி பாதிப்புக்கு உள்ளாகும் என கணித்திருந்தார். மட்டுமின்றி அமெரிக்காவின் 44வது ஜனாதிபதி ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர் எனவும் கணித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சார்லஸ் மன்னர் ஆட்சி... பாபா வங்காவின் விசித்திர கணிப்பு | Baba Vanga King Charles Rule Forever