ஐ.நா பொதுச் சபையில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சரின் விசேட உரை!

0
396

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி இந்த வார இறுதியில் ஐநா பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.

2022 செப்டம்பர் 13 முதல் 26 வரை நடைபெறும் 77வது ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் இன்று அமெரிக்கா செல்ல உள்ளார்.

வெளிவிவகார அமைச்சர் செப்டெம்பர் 24 ஆம் திகதி ஐ.நா பொதுச் சபையில் உரையாற்ற உள்ளார்.

ஜெனிவாவில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கலந்து கொண்ட சில நாட்களிலேயே அவர் அமெரிக்கா சென்றுள்ளார்.

மனித உரிமைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு இலங்கையில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அமைச்சர் சபைக்கு விளக்கியுள்ளார்.

மனித உரிமைகளுக்கான உயர் ஸ்தானிகர் அலுவலகம் இலங்கை மீது “பொருளாதார குற்றங்கள்” செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் வெளியுறவு அமைச்சர் அதை நிராகரித்துள்ளார்.