பிரித்தானிய வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை ஜனாதிபதி ரணில்!

0
551

இரண்டாம் எலிசபெத் மகாராணியின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் அரச தலைவர்கள் மத்தியில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பிரித்தானிய வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பிடிக்கவுள்ளார்.

எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழா

எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் பங்குகொண்ட தம்பதியரின் மகனான ரணில் விக்ரமசிங்க எலிசபெத் மகாராணியின் இறுதிச்சடங்குகளில் பங்கேற்பதன் மூலம் பிரித்தானிய வரலாற்று புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார்.

பிரித்தானிய வரலாற்றில் இடம்பிடித்த இலங்கை ஜனாதிபதி ரணில்! | President Ranil Who Is A Part Of British History

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெற்றோர்களான எஸ்மன்ட் விக்ரமசிங்க மற்றும் நளினி விக்ரமசிங்க ஆகியோர் 1952ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் எலிசபெத் மகாராணியின் முடிசூட்டு விழாவில் பிரதமர் டட்லி சேனாநாயக்கவுடன் கலந்துகொண்டனர்.

இந்த நிலையில் உலக வரலாற்றில் அரச குடும்பத்திற்கு வெளியே இவ்வாறானதொரு வாய்ப்பைப் பெற்ற முதல் நபர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க என்பது குறிப்பிடத்தக்கது.