ஐந்து பேர் கையில் இலங்கை!

0
174

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கீழ் இருந்த பல அமைச்சுக்கள் ஐந்து பதில் அமைச்சர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கிற்காக ஜனாதிபதி பிரித்தானியா சென்று மீண்டும் நாடு திரும்பும் வரை இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சராக பிரமித பண்டார தென்னகோனும், பதில் நிதி அமைச்சராக ரஞ்சித் சியம்பலாபிட்டியவும், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சராக கீதா குமாரசிங்கவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கனக ஹேரத் தொழில்நுட்பத்துறையின் பதில் அமைச்சராகவும், திலும் அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும் செயற்படவுள்ளார்.

லண்டன் சென்றடைந்தார் ஜனாதிபதி

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க லண்டனை சென்றடைந்துள்ளதாக கூறப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் நாளை (19) நடைபெறும் இரண்டாம் ​எலிசெபத் மகாராணியின் இறுதி அஞ்சலியில் பங்கேற்பார்.

ஐந்து பேரின் கைகளில் நாடு! | The Country In The Hands Of Five People