இதற்கு இத்தனை அமைச்சர்கள் தேவையா? சஜித் கேள்வி

0
130

இலங்கையை வங்குரோத்து நிலையில் இருந்து காப்பாற்ற இவ்வளவு அமைச்சர்கள் தேவையா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) கேள்வி எழுப்பியுள்ளார்.

மொனராகலை றோயல் கல்லூரியில் வைத்து அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டதுடன் எதிர்க்கட்சித் தலைவர் பாடசாலை மாணவர்களுடன் விளையாட்டுப் போட்டிகளிலும் ஈடுபட்டார்.

எதிர்கட்சித் தலைவர் கருத்தறிந்த “சக்வல” வேலைத்திட்டத்தின் கீழ் மொனராகலை றோயல் கல்லூரிக்கு 46 இலட்சம் பெறுமதியான பேரூந்து ஒன்று நேற்று அன்பளிப்பு செய்யப்பட்டது.

அங்கு எதிர்க்கட்சித் தலைவரும் அதே பேருந்தில் அப்பகுதியை சுற்றிப்பார்த்தார்.

பின்னர் மொனராகலை றோயல் கல்லூரியின் குழந்தைகளுடன் எதிர்க்கட்சித் தலைவர் விளையாட்டுக்களில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.