தாய்லாந்து ராணி போல் வேடமணிந்து போராடிய பெண் கைது

0
138

தாய்லாந்தில் ராணியார் போன்று பாரம்பரிய உடை உடுத்தி அரச குடும்பத்திற்கு எதிராக போராடிய பெண் ஒருவரை சிறையில் தள்ளியுள்ளது அங்குள்ள நீதிமன்றம்.

பாங்காக்கில் கடந்த 2020ல் குறித்த போராட்டமானது சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதில் Jatuporn Saeoueng என்பவர் தாய்லாந்து ராணியாரை கேலி செய்யும் வகையில் அவர் உடுத்துவது போன்ற பாரம்பரிய உடையுடன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

மட்டுமின்றி அவருக்கு சக ஆர்ப்பாட்டக்காரர் ஒருவர் குடையும் பிடித்துள்ளார். இந்த சம்பவம் அப்போது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில், திங்களன்று குறித்த சமூக ஆர்வலருக்கு 2 ஆண்டுகள் சிறையும் சுமார் 23.58 பவுண்டுகள் அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அரச குடும்பத்தினரின் பகட்டு வாழ்க்கையை கேலி செய்யும் வகையில் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பொதுமக்களும் சமூக ஆர்லவர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆனால், ராணியாரை தாம் கேலி செய்யவில்லை எனவும், ராணியார் போன்று பாரம்பரிய உடை உடுத்துவது குற்றமா எனவும் Jatuporn Saeoueng கேள்வி எழுப்பியுள்ளார்.

ராணியார் போல் வேடமிட்டு கேலி செய்த பெண்... அவரின் தற்போதைய நிலை | For Mocking Queen Thai Protester Jailed