ரஷ்ய தாக்குதலால் தண்ணீரில் மிதக்கும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கியின் பிறந்த இடம்

0
448

உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி பிறந்த நகரத்தில் அணை ஒன்றை ரஷ்யா வெடிகுண்டால் தகர்த்த நிலையில் தற்போது மொத்த நகரமும் தண்ணீரில் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

உக்ரைனின் Kryvyi Rih நகரில் அமைந்துள்ள குறித்த அணை நேற்று இரவு கடும் தாக்குதலை முன்னெடுத்த ரஷ்யா மொத்தம் 8 குரூஸ் ஏவுகணைகளை குறிவைத்து ஏவியுள்ளது.

மத்திய உக்ரைனில் உள்ள டினிப்ரோவில் இருந்து தென்மேற்கே 93 மைல் தொலைவில் உள்ள நகரத்தை மொத்தமாக வெள்ளத்தில் மூழ்கடிக்கும் முயற்சியாக இந்த தாக்குதலை பார்ப்பதாக ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.

ரஷ்ய தாக்குதலால் தண்ணீரில் மிதக்கும் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி பிறந்த நகரம் | President Zelensky Flooding Homes Flooding Homes

மேலும், பாதிக்கப்பட்ட பகுதி மக்களை உடனடியாக வெளியேறவும் உத்தரவு வெளியிடப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மக்கள் அப்பகுதியில் இருந்து வெளியேறி வருவதாகவும் குடியிருப்புகள் பல சேதமடைந்துள்ளதாகவும் ஆனால் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும் நகர மேயர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் ரஷ்யாவை கடுமையாக சாடிய ஜெலென்ஸ்கி அணை என்ன ராணுவ முகாமா? ஏன் இவ்வாறான நடவடிக்கைகளை ரஷ்யா ஊக்குவிக்கிறது என கொந்தளித்துள்ளார். மேலும் போர் முனையில் இருந்து உயிருக்கு பயந்து தப்பிய கோழைகள் தொலைவான பகுதியில் இழப்பை ஏற்படுத்த பார்க்கிறார்கள் என்றார்.