பாரிஸில் புதிய டிரைவர் இல்லாத ரயில் சேவை!

0
482

பாரிஸில் 14 ஆம் இலக்க மெற்றோ சேவை போன்று நான்காம் இலக்க மெற்றோவும் சாரதி இல்லாமல் தானியங்கி முறையில் பயணிக்க உள்ளதாக அறிவிக்க்பபட்டுள்ளது.

12 ஆம் திகதி முதல் இந்த சாரதியற்ற தானியங்கி முறையிலான தொடருந்து இயக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக நான்கு தொடருந்துகள் மட்டுமே நாள் ஒன்றில் இயக்கப்பட உள்ளது.

2023 ஆம் ஆண்டுக்குள் 4 ஆம் இலக்க மெற்றோ சேவைகள் அனைத்தும் தானியங்கி முறைக்கு மாற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நான்காம் இலக்க மெற்றோவில் நாள் ஒன்றுக்கு 52 சேவைகள் இயக்கப்படுகிறன.

இவற்றில் நான்கு தொடருந்துகள் கடந்த ஜூன் மாதம் முதல் பரீட்சாத்தமாக தானியங்கி முறையில் இயக்க பரிசோதிக்கப்பட்டு வந்தது. அதையடுத்து, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நான்கு தொடருந்துகள் தானியங்கி முறையில் இயக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரிஸில் கடந்த 17 வருடங்களாக 14 ஆம் இலக்க மெற்றோ தானியங்கி முறையில் இயங்கி வருகிறமை குறிப்பிடத்தக்கது. தொடர்ச்சியான உறுதியான சோதனை நடவடிக்கைகளுக்குப் பிறகு திங்கள்கிழமை முதல் தானியங்கி ரயில் இயங்கியது என குறிப்பிடப்படுகின்றது.

பாரிஸில் ஓட்டுனரின்றி இயங்கும் புதிய ரயில் சேவை! | New Driverless Train Service In Paris

பாரிஸ் மெட்ரோ ரயில் பாதையில் உருவாகி வரும் இந்த ஓட்டுநர் இல்லாப் பயண முறை ஏனைய ரயில் பாதைகளிலும் விரைவில் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

1973 ஆம் ஆண்டு புழக்கத்தில் உள்ள ரயில்கள் தற்போது இயங்கும் என குறிப்பிடப்படுகின்றது. நான்காம் இலக்கம் என்பது இல் து பிரான்ஸ் வலையமைப்பின் மெட்ரோ மற்றும் ஏர்.ஊ.ஏர் (RER) இணைந்த 3வது பரபரப்பான ரயில் பாதையாகும்.

இதன் மூலம் பயணங்களும் மேலும் வேகமாக முன்னெடுக்கப்படும் எனவும் பயணிகளுக்கு தாமதமின்றி பயணிக்க உதவியாக இருக்கும் என குறிப்பிடப்படுகின்றது.