“கப்புட்டு காக் காக்” என்று ஒலி எழுப்பியதற்காக கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் விடுதலை

0
452
Close up lawyer businessman working or reading lawbook in office workplace for consultant lawyer concept.

மக்கள் போராட்டத்தின் போது உயிர்நீத்த மற்றும் காயமடைந்த போராட்டக்காரர்களை நினைவுகூரும் வகையில் காலி முகத்திடலில் இடம்பெற்ற நினைவேந்தல் நிகழ்வின் போது வாகனத்தில் “கப்புட்டு காக் காக்” என்ற  ஒலியை எழுப்பியதாகக் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கின் சந்தேகநபரான சட்டத்தரணியை விடுதலை செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் S.M.பிரபாகரன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எவருக்கேனும் எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்வதற்கு முன்னதாக சட்டம் தொடர்பில் ஆராய்ந்து அதன் பின்னர் வழக்கு தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு அறிவுறுத்தல் விடுத்த மேலதிக நீதவான் சட்டத்தரணி துஷ்மந்த வீரரத்னவை விடுதலை செய்துள்ளார்.