கென்யாவின் புதிய அதிபராக வில்லியம் ரூட்டோ பதவியேற்பு!

0
120
Kenya's new president William Ruto, seen behind fountain fireworks, holds up a ceremonial sword as he is sworn in to office at a ceremony held at Kasarani stadium in Nairobi, Kenya Tuesday, Sept. 13, 2022. William Ruto was sworn in as Kenya's president on Tuesday after narrowly winning the Aug. 9 election and after the Supreme Court last week rejected a challenge to the official results by losing candidate Raila Odinga. (AP Photo/Brian Inganga)

கிழக்கு ஆப்பிரிக்க குடியரசு நாடான கென்யாவின் ஐந்தாவது அதிபராக வில்லியம் ரூட்டோ (William Ruto) பதவியேற்றார்.

அதிபர் தேர்தலில் 50.5 சதவீத வாக்குகளுடன் வில்லியம் ரூட்டோ (William Ruto) வெற்றி பெற்றவராக அறிவிக்கப்பட்டாலும் அந்த முடிவை எதிர்த்து எதிர்க்கட்சித் தலைவர் ரய்லா ஒடிங்கா (Raila Odinga) கென்யா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

Raila Odinga

இந்நிலையில் வழக்குகளை விசாரித்த நீதிபதிகள் கடந்த வாரம் அந்த மனுக்களை நிராகரித்ததைத் தொடர்ந்து முன்னாள் துணை அதிபராக பதவி வகித்த வில்லியம் ரூட்டோ (William Ruto) அதிபராக பதவியேற்றுக் கொண்டார்.

கென்யாவின் புதிய அதிபராக பதவியேற்ற வில்லியம் ரூட்டோ! | William Ruto Sworn In As Kenya S New President

கென்யாவின் அதிபராக இருந்து பதவி விலகும் உஹுரு மற்றும் துணை அதிபராக இருந்து அதிபராக பதவியேற்ற வில்லியம் ரூட்டோ (William Ruto) ஆகிய இருவரும் பதவியேற்பு விழாவில் கைகுலுக்கி பேசிக் கொண்டனர்.