ராணியின் மறைவிற்கு கனடாவில் விடுமுறை அளிக்க எதிர்ப்பு

0
488

காலஞ்சென்ற பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதி கிரியைகள் நடைபெறும் எதிர்வரும் 19ம திகதி கனடாவில் விடுமுறை அறிவிக்கப்படுவதற்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கனேடிய வர்த்தகர்கள் குழுவொன்று இவ்வாறு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மாகாணங்கள் எதிர்வரும் 19ம் திகதி விடுமுறை அறிவிக்க கூடாது என இந்த வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மகாராணியின் மறைவிற்காக கனடாவில் விடுமுறை வழங்கப்படுவதற்கு எதிர்ப்பு | Business Group Opposes Sept19 Statutory Holiday

மகாராணிக்காக இரங்கல் வெளியிட பல்வேறு வழிகள் காணப்படுவதாக கனேடிய சுயாதீன வியாபார ஒன்றியத்தின் தேசிய விவகார துணைத் தலைவர் ஜெஸ்மின் குனட்டின் குணெட்டி தெரிவித்துள்ளார்.

இவ்வாறு இரங்கல் வெளியிடுவதன் ஊடாக சிறிய வியாபாரங்கள் பாதிக்கப்படக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக் கிரியைகளுக்காக எதிர்வரும் 19ம் திகதி சமஷ்டி விடுமுறை அறிவிப்பதாக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

மாகாண அரசாங்கங்கள் விடுமுறை அறிவிக்கப்பாத நிலையில் சமஷ்டி அரசாங்க பணியாளர்களுக்கு மட்டுமே இந்த விடுமுறை பொருந்தும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

கியூபெக், ஒன்றாரியோ, சஸ்கட்ச்வான் போன்ற மாகாணங்களில் தேசிய துக்க தினம் அறிவிக்கப்பட்ட போதிலும் மாகாண விடுமுறை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.