கோட்டாபயவின் பேனா பற்றிய வியப்பூட்டும் தகவல்!

0
556

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையில் இருக்கும் பேனா வெறும் பார்வைக்கு சாதாரண ஒரு பேனாவாகத் தெரியும். ஆனால் இந்த பேனாவுக்குப் பின்னால் யாருக்கும் தெரியாத தகவல் இருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதி பதவிக்கு கையொப்பமிட்டதில் இருந்து பதவி விலகும் நாள் வரை ஒரே பேனாவைப் பயன்படுத்தினார். இந்த பேனாவில் பல இரகசியங்கள் அடங்கியுள்ளன.

இது உலகின் விலையுயர்ந்த பேனாக்களில் ஒன்று, இந்த பேனாவின் சராசரி விலை 490 டொலர்கள். கோட்டாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளின் பேரில், இந்த பேனா 24 கேரட் தங்கத்தில் Montblanc நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது.

இலங்கை நாணயத்தில் கிட்டத்தட்ட 02 மில்லியன் செலவில் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மனியின் ‘த ஸ்பீக்கர்’ சஞ்சிகை குறிப்பிட்டிருந்தது. இரண்டாவது விஷயம் மிகவும் சுவாரஸ்யமானது.

இரண்டு மில்லியன் ரூபா பெறுமதியான இந்தப் பேனாவை, கோட்டாபய ஜனாதிபதி பதவியில் கையெழுத்திடுவதற்கு சில நாட்களுக்கு முன்னர், அனுராதபுரத்தில் உள்ள ஞானா அக்காவின் கோவிலுக்குச் சென்று, இந்த பேனாவில் கையெழுத்திடும் ஒவ்வொரு வேலையையும் வெற்றிகரமாக செய்யுமாறு வேண்டிக் கொண்டார்.

கோட்டா ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் சகல அரசாங்க அலுவல்களுக்கும் இந்த பேனாவால் கையொப்பமிட்டிருந்த போதிலும், ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட்ட போது மட்டும் ஏன் இந்த பேனா பயன்படுத்தப்படவில்லை என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

கோட்டாபயவின் பேனா குறித்து வெளியான ஆச்சரிய தகவல்! | Surprising Information About Gotabaya S Pen