பாகிஸ்தானுக்கு எதிராக இலங்கை அணி அபார வெற்றி!

0
279

ஆசிய கிண்ண டி20 தொடரின் சூப்பர் 4 சுற்றில் நேற்று இரவு இடம்பெற்ற போட்டியில் இலங்கை  அணி பாகிஸ்தானை வீழ்ச்சி அபார வெற்றியை பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் பந்து வீச்சை தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 121 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

பாகிஸ்தானை வீழ்ச்சி அபார வெற்றியை பெற்ற இலங்கை அணி! | Asia Cup2022 Sri Lanka Team Beat Pakistan Cricket

பந்துவீச்சில் வனிந்து ஹசரங்க 3 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன மற்றும் பிரமோத் மதுஷான் ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 122 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானை வீழ்ச்சி அபார வெற்றியை பெற்ற இலங்கை அணி! | Asia Cup2022 Sri Lanka Team Beat Pakistan Cricket

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 17 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்பில் பெத்தும் நிஸ்ஸங்க 55 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். மேலும் பாகிஸ்தான் மற்றும் இலங்கை இடையிலான இறுதி ஆட்டம் நாளைய தினம் (11-09-2022) துபாயில் இடம்பெறவுள்ளது.

பாகிஸ்தானை வீழ்ச்சி அபார வெற்றியை பெற்ற இலங்கை அணி! | Asia Cup2022 Sri Lanka Team Beat Pakistan Cricket