ராணி எலிசபெத்தின் மறைவுக்கு நேபாளத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்க முடிவு

0
94

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் (Queen Elizabeth II) மறைவுக்கு மூன்று நாட்கள் துக்கம் அனுசரிப்பதாக நேபாள அரசு முடிவு செய்துள்ளது.

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் உடல் நல குறைவு காரணமாக காலமானார்.

மகாராணி எலிசபெத் மறைவுக்கு வெளிநாடொன்றில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு | Nepal Govt3 Days Mourning Death Queen Elizabeth

தனது 25 வயதில் ராணியாக பதவியேற்ற எலிசபெத் ராணி சுமார் 70 ஆண்டுகாலம் ராணியாக பதவி வகித்துள்ளார். இந்த நிலையில் உலக தலைவர்கள் பலர் மகாராணி இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேபாள அரசானது இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தனர். மேலும் செப்டம்பர் 10 (இன்று) முதல் செப்டம்பர் 12-ம் திகதி வரை துக்கம் அனுசரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நேபாள தூதரகங்கள் மற்றும் தூதரகங்களில் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராணி எலிசபெத் மறைவுக்கு வெளிநாடொன்றில் 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு | Nepal Govt3 Days Mourning Death Queen Elizabeth