புரட்டியெடுத்த வெள்ளத்தில் சின்னாபின்னமான பாகிஸ்தான்

0
177

பாகிஸ்தானைப் புரட்டியெடுத்த வெள்ளத்தில் பல விளைநிலங்களும் வீடுகளும் மூழ்கிப் போயுள்ளதாக கூறப்படும் நிலையில் சில கிராமங்கள் சுவடின்றி மூழ்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாகிஸ்தானின் சிந்து வட்டாரத்தின் தென்பகுதி வெள்ளத்தால் படுமோசமாகப் பாதிப்படைந்துள்ளது. இந்நிலையில் இந்த அனர்த்தத்தால் சுமார் 100,000 பேர் வீடின்றித் தவிப்பதாக அரசாங்கம் கூறுகிறது.

அத்துடன் நாட்டில் மொத்தம் 33 மில்லியன் மக்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதாய் மதிப்பிடப்பட்டுள்ளது. 2 மில்லியன் வீடுகளும் வர்த்தகங்களும் வெள்ள நீரில் மூழ்கின.

புரட்டியெடுத்த வெள்ளத்தில் சின்னாபின்னமான பாகிஸ்தான் | Pakistan Shattered By The Overturned Flood

சுமார் 7,000 கிலோமீட்டர் சாலைகள் சேதமடைந்துள்ளதுடன் 256 பாலங்கள் உடைந்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது. கடற்படை வீரர்கள் இயன்றவரை நிவாரண உதவிகளை வழங்கி வருகின்றது.

மோசமான பாலங்களையும் நீர்த்தேக்கங்களையும் பாதுகாத்து நகர்ப்புறங்களில் மேலும் வெள்ளம் ஏற்படாமல் பாதுகாப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்திவருகிறதாகவும் தெரிவிக்கபப்டுள்ளது.