ராணி எலிசபெத் குறித்து பிரிட்டன் நாளேடுகளின் பதிவுகள்!

0
670

எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன என எலிசபெத் மகாராணியின் பிரிவுச் செய்தியுடன் பிரிட்டனின் நாளேடுகள் வெளியாகியுள்ளன.

1953 இல் மகாராணியின் பதவியேற்பு நிகழ்வு படத்துடன் வெளியாகியுள்ள டைம்ஸ் சேவை வாழ்க்கை என குறிப்பிட்டுள்ளது.

என்னால் உங்களை போருக்கு அழைத்துச்செல்ல முடியாது என்னால் உங்களிற்கு சட்டங்களையோ நீதியையோ வழங்க முடியாது ஆனால் என்னால் வேறு எதையாவது செய்ய முடியும்.

இந்த பழமையான தீவுகள் அனைத்திற்கும் நமது சகோதரத்துவ நாடுகளின் அனைத்து மக்களிற்கும் எனது இதயத்தை வழங்க முடியும் என 1957 ம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று எலிசபெத் மகாராணி தெரிவித்த கருத்துக்களும் இடம்பெற்றுள்ளன.

எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன

அந்தவகையில் எங்கள் இதயங்கள் உடைந்துவிட்டன என (இளவரசி எலிசபெத்தின் 1952 ம் ஆண்டு படத்துடன்) டெய்லி மெய்ல் தெரிவித்துள்ளது.

ராணியார்  குறித்து பிரிட்டன் நாளேடுகள் கவலை! | Britain S Newspapers Are Worried About The Queen

எங்கள் துயரத்தை வெளிப்படுத்துவதற்கான வார்த்தைகளை நாங்கள் எப்படி கண்டுபிடிப்பது என டெய்லி மெயிலின் பத்தி எழுத்தாளர் சாரா வைன் கேள்வி எழுப்பியுள்ள்ளதுடன் எங்கள் துயரம் துக்கம் என்பது நூறு வித்தியாசமான உணர்வுகளை கொண்டது அவற்றை புரிந்துகொள்வது கடினம் என அவர் தெரிவித்துள்ளார்.

எங்கள் அன்பிற்கு நாங்கள் செலுத்தும் விலை துயரம் என செப்டம்பர் 11 தாக்குதலின் பின்னர் பிரிட்டிஸ் மகாராணி தெரிவித்தை வார்த்தைகளுடன் டெய்லி டெலிகிராவ் வெளியாகியுள்ளது.

ராணியார்  குறித்து பிரிட்டன் நாளேடுகள் கவலை! | Britain S Newspapers Are Worried About The Queen

அதேசமயம் தனது இரங்கல் செய்தியில் அமெரிக்க ஜனாதிபதி இந்த வார்த்தைகளை நினைவுகூர்ந்துள்ளார். மிரர் நன்றி என்ற வார்த்தைகளுடன் வெளியாகியுள்ளது.

சன் நாங்கள் உங்களை நேசித்தோம் என தெரிவித்துள்ளது. டெய்லி எக்ஸ்பிரஸ் எங்கள் நேசத்திற்குரிய மகாராணி காலமாகிவிட்டார் என தெரிவித்துள்ளது.

டெய்லி ஸ்டார் நீங்கள் உங்கள் கடமையை செய்தீர்கள் என தெரிவித்துள்ளது. இவ்வாறு ராணியார் குறித்து பிரிட்டனின் நாளேடுகள் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளன.