ரஷ்ய அதிபர் புடினின் பேச்சால் அதிர்ச்சியில் உலக நாடுகள்!

0
195

உக்ரைன் நாட்டில் இலக்குகளை அடையும் வரை ராணுவ நடவடிக்கை தொடரும் என ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin) கூறியுள்ளமை உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் நாட்டில் கடந்த சில மாதங்களாக ரஷ்யா ராணுவ நடவடிக்கை எடுத்து வருகிறது என்பதும் உக்ரைன் நாட்டிற்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷிய அதிபர் புடின்  பேச்சால் உலக நாடுகள் அதிர்ச்சி! | World Shocked By Russian President Putin S Speech

இந்த நிலையில் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உள்பட பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை உள்பட பல்வேறு தடைகள் விதிக்கப் பட்ட போதிலும் தனது இராணுவ நடவடிக்கையை ரஷ்யா தொடர்ந்து வருகிறது.

இந்த நிலையில் உக்ரைன் மீதான எங்களது அனைத்து நடவடிக்கைகள் இலக்கை அடையும் வரை தொடரும் என ரஷ்ய அதிபர் புடின் (Vladimir Putin) கூறியுள்ளார்.

மேலும் உக்ரைன் நாட்டின் பிரச்சனைக்கு ஒரு முடிவு கட்டவே முயன்று முயற்சிக்கிறோம் என்றும் ரஷ்ய அதிபர் புதின் (Vladimir Putin) கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ரஷிய அதிபர் புடின்  பேச்சால் உலக நாடுகள் அதிர்ச்சி! | World Shocked By Russian President Putin S Speech