ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளரை அடிக்க வந்த பாகிஸ்தான் வீரர்!

0
221

ஆசியக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர் பரீத் அகமது மாலிக்கை (Pareet Ahmed Malik) பாகிஸ்தான் வீரர் ஆசிப் அலி (Asif Ali) பேட்டை கொண்டு அடிக்க வந்த காட்சி வெளியாகியுள்ளது.

சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் வென்று பாகிஸ்தான் இறுதி போட்டிக்கு முன்னேறியது.

கடைசி ஓவரின் 4வது பந்தில் சிக்சர் விளாசிய ஆசிப் அலி (Asif Ali), மாலிக் (Pareet Ahmed Malik) வீசிய அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார்.

இதையடுத்து மாலிக் (Pareet Ahmed Malik) கிண்டலடிக்க பேட்டை கொண்டு ஆசிப் அலி (Asif Ali) அடிக்க வந்தார். உடனடியாக அங்கிருந்த மற்ற வீரர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானப்படுத்தியதால் ஆசிப் அலி (Asif Ali) விலகிச் சென்றார்.