தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் தேசிய மாநாடுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நாமல்

0
392

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தேசிய மாநாடு நேற்று மட்டக்களப்பில் நடைபெற்றது. குறித்த மாநாட்டிற்கு முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்திருந்தார்.

இங்கு கட்சியின் தேசிய மாநாடு என்று கூறி நடத்தப்பட்ட மாநாடு குறித்து தமிழ் மக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே தமிழ் தேசியம் குறித்து பல விமர்சனங்களை முன்வைத்து வந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் தற்போது தேசிய மாநாடு என்ற பெயரில் நடத்தியது எந்த வகையான தேசியம் என்ற கேள்வி எழுகிறது?

இது தமிழ் தேசிய மாநாடா? அல்லது சிங்கள தேசிய மாநாடா? அல்லது இலங்கை தேசிய மாநாடா? என்ற கேள்வி எழுகிறது?

Gallery

இலங்கையில் இரண்டு தேசிய இனங்கள் தான் உண்டு அதில் ஒன்று தமிழ் தேசிய இனம் மற்றது சிங்கள தேசிய இனம் இந்த இரண்டு இனங்களுமே தங்களை தேசியம் என்ற பதத்திற்கு உரித்தான அம்சங்களை கொண்டுள்ளனர்.

அந்த வகையில் தேசியம் என்றால் என்ன?

அதன் வரைவிலக்கணம் என்ன என்று தெரியாது தான் பிறந்த இனத்தின் தேசியத்தை குறைகூறி குற்றம் கூறி அரசியலுக்காக விமர்சனம் செய்து வந்த கட்சி இன்று தேசிய மாநாடு என்று கூறி நடத்திய அந்த தேசியத்திற்கு என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்புகின்றார்கள் தமிழ் மக்கள்.