இலங்கையில் ஒவ்வொரு குடும்பமும் 58 இலட்சம் ரூபா கடன்; அதிர்ச்சி தகவல்!

0
395

நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக இந்த வருடம் மே மாதம் வரை ஒவ்வொரு குடும்பமும் 58 இலட்சம் ரூபா கடனில் சிக்கியுள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதார மற்றும் புள்ளி விபரவியல் கற்கைகள் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார்.

அதனை ஒரு சிறப்பு ஆய்வின் விளைவாக தான் இதை தெரிவித்துள்ளதாக கூறியுள்ளார்.

அந்த ஆய்வில் 2019 ஆம் ஆண்டு முதல் இந்த ஆண்டு மே மாதம் வரை மக்கள் வங்கிகளில் கடன் வாங்குவது சுமார் 50% அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒவ்வொரு குடும்பமும் 58 இலட்சம் ரூபா கடனில் சிக்கியுள்ளதாக அதிர்ச்சி தகவல்! | Every Family In The Country Debt Of58 Lakh Rupees

அதிகரித்துள்ள தொகை

2019ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு மே மாதம் வரை நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் கடன் தொகையும் 1,715,000 ரூபாவால் அதிகரித்துள்ளதாக பேராசிரியர் தெரிவித்துள்ளார்.

அந்தக் காலப்பகுதியில் ஒருவரின் கடன் தொகை 4,64,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து நாட்டில் உள்ள ஒவ்வொரு நபரும் நாளொன்றுக்கு 526 ரூபாய் கடனாளியாக இருக்கிறார்கள் என அந்த ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.