க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 A; முழு இலங்கையையும் தன் பக்கம் திருப்பிய மாணவி!

0
603

இரு கைகளும் இல்லாத நிலையில் காலால் எழுதிப் படித்த மாணவி க.பொ.த உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3 A பெறுபேற்றை பெற்று திறமைச் சித்தியடைந்துள்ளார்.

எஹேலியகொட தேசிய பாடசாலையில் கல்வி கற்ற ரஷ்மி நிமேஷா குணவர்தன என்ற மாணவியே உயர்தர வர்த்தக பிரிவில் சித்திகளை பெற்றுள்ளார்.

2002ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 23ஆம் திகதி பிறந்த ரஷ்மி, தெல்ஒழுவ பாடசாலையில் ஆரம்ப கல்வியை தொடர்ந்தார்.

க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 A; முழு இலங்கையையும் தன் பக்கம் திருப்பிய  மாணவி! | Sri Lanka Advanced Level Results2021

அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு 5 ஆம் வகுப்பு புலமை பரீசில் பரீட்சையில் சித்தியடைந்த பின்னர் எஹேலியகொட தேசிய பாடசாலையில் மேலதிக கற்கை நடவடிக்கைகளை தொடர்ந்தார்.

க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 A; முழு இலங்கையையும் தன் பக்கம் திருப்பிய  மாணவி! | Sri Lanka Advanced Level Results2021

2018ஆம் ஆண்டு இடம்பெற்ற சாதாரண தர பரீட்சையில் 8 A சித்திகளையும் ஒரு B சித்தியும் பெற்றுள்ளார். தற்போது உயர்தர பரீட்சையில் வர்த்தக பிரிவில் 3 A சித்திகளை பெற்றுள்ளார்.

சர்வதேச போட்டியில் தங்க பதக்கம்

அதுமட்டுமல்லாது அத்துடன் 2017ஆம் ஆண்டு வியட்நாமில் இடம்பெற்ற Global IT challenge 2017 Super challenger சர்வதேச போட்டியில் தங்க பதக்கம் பெற்றுள்ளார்.

இந்நிலையில் வாழ்க்கையில் வெற்றி பெற குறைகள் தடையில்லை என ரஷ்மி நிரூபித்து காட்டியுள்ளார் என பலரும் அவருக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறிவருகின்றனர்.  

க.பொ.த உயர்தர பரீட்சையில் 3 A; முழு இலங்கையையும் தன் பக்கம் திருப்பிய  மாணவி! | Sri Lanka Advanced Level Results2021