பதவியிலிருந்து விலகப் போவதாக கூறும் அமெரிக்காவின் மூத்த நிபுணர்

0
408

அமெரிக்காவின் மூத்த தொற்றுநோய் நிபுணரான மருத்துவர் ஆன்ட்டனி ஃபௌச்சி (Anthony Fauci) பதவியிலிருந்து விலகப் போவதாகக் கூறியுள்ளார். அமெரிக்கப் பொதுச்சேவைத் துறையில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன்ட்டனி ஃபௌச்சி (Anthony Fauci) பணியாற்றுகிறார்.

முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் (Donald Trump) தற்போதைய அதிபர் ஜோ பைடன் (Joe Biden) ஆகியோரின் நிர்வாகத்தின் கீழ் அவர் அந்நாட்டுக் கிருமிப்பரவல் நிலவரத்தைக் கையாண்டு வருகிறார்.

பதவியிலிருந்து விலகப் போவதாக கூறும் அமெரிக்காவின் மூத்த  நிபுணர் | Senior Us Expert Says He Will Step Down

தற்போது அவர் (Anthony Fauci) அமெரிக்கத் தேசிய அழற்சி, தொற்று நோய்களுக்கான நிலையத்தில் இயக்குநராக உள்ளார். அந்தப் பதவியில் டாக்டர் ஃபௌச்சி (Anthony Fauci) சுமார் 40 ஆண்டுகளாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவர் மருத்துவத்துறைக்கு ஆற்றிய பங்கைச் சுகாதார வல்லுநர்கள் மெச்சியிருக்கின்றனர். HIV எனப்படும் தடுப்புச் சக்தி இழப்பு நோய்க்கான மேம்பாடுகள், கொரோனா நோய்ப்பரவல் ஆகியவற்றில் டாக்டர் ஃபௌச்சி (Anthony Fauci) பங்களித்திருக்கிறார்.

பதவியிலிருந்து விலகப் போவதாக கூறும் அமெரிக்காவின் மூத்த  நிபுணர் | Senior Us Expert Says He Will Step Down

அதேவேளை முகக்கவசம் அணிவது, தடுப்பூசி போட்டுக் கொள்வது ஆகியவற்றின் தொடர்பில் அமெரிக்கர்கள் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.